வால் தின்னும் பல்லி

இழக்கவியலாத வால் பகுதியில்
தனது மரணம் இருப்பதறிந்து
என்னை எதிர்கொள்ளும் கணங்களில்
தனது வாலைப் புசித்து விடும்
சுவர்ப் பல்லி வடிவிலான அவதாரக் கதையை
உன்னைப் போலவே கதைகளோடு வாழ நேர்ந்த நான்
வால் தின்னும் கதையென்கிறேன்
நீயதைப் புராணமென்கிறாய்
யாரிடமும் சொல்லி விடாதே
ஆப்பிள் தோட்டதில் சந்தித்த பெண் சாத்தானின்
நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல்பெண்
தானொரு பெண்சுகியென உணர்ந்த கணத்தை
உண்டு செரித்ததும் கூட
அந்தப் பல்லி தான்

                                               நன்றி: காலச்சுவடு ஜூன் 2011

No comments: