கூழாங்கல்மழை ஓய்ந்த மரத்தடியில்
கிளை உலுக்கி விளையாடுகையில்
இன்னொரு முறை மழை பெய்கிறது

தூக்கம் முழுக்க
கனவுகளெனப் பெய்துவிட்டு
அதிகாலை மொட்டை மாடி வடிகுழாயில்
இன்னொரு முறை மழை பெய்கிறது

பேருந்துச் சக்கரத்தில்
நசுங்கும் மழையின் குருதிக்கறை 
அவ்வப்போது ஆடையெங்கும்

சிமண்ட் ஓடுகளில் பெய்யும்போது மட்டும்
கூழாங்கல் ஆகிவிடுகிறது மழை

உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008

1 comment:

சுவாதி ச முகில் said...

//பேருந்துச் சக்கரத்தில்
நசுங்கும் மழையின் குருதிக்கறை
அவ்வப்போது ஆடையெங்கும்// வித்தியாசமான பார்வை. அருமை